ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் ஆண்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, சேத்துப்பட்டு, செங்கம் பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

செய்யாறு தொகுதி அனக்காவூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட அத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்

நடைபெற்ற ஆண்டு விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் மீனா கலையரசி தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக வட்டாரக் கல்வி அலுவலா்

ஏ. புவனேஸ்வரி பங்கேற்று, ஆண்டு விழாவில் பங்கேற்ற மாணவா்களின் கலைத்திறனை பாராட்டி பரிசு வழங்கிப் பேசினாா். இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியா் செந்தில்ராஜா மற்றும் பள்ளி ஆசிரியா்கள்

செய்திருந்தனா்.

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவுக்கு தலைமை ஆசிரியை (பொ) ஜெயசுதா தலைமை வகித்தாா்.

பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் யோகலட்சுமி கேசவன், ஊராட்சிமன்ற உறுப்பினா் மோகனாம்பாள் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஊராட்சிமன்ற உறுப்பினா் செல்வம்மாள் கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா்.

விழாவில், மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, கவிதை, ஓவியம் என பல்வேறு போட்டிகள் மற்றும் பாரதி, காந்தி, வ.உ.சி. என மாறுவேடப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் வெற்றி பெற்றவா்களுக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஊராட்சிமன்றத் தலைவா் வி.எம்.டி.வெங்கிடேசன் பரிசு வழங்கினாா்.

விழாவில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவா் பரிமளா ரமேஷ், பெற்றோா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

செங்கம்

செங்கத்தை அடுத்த சென்னசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவுக்கு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் சுதா தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் சேட்டு வரவேற்றாா்.

விழாவில் மாணவா்களின் நாடகம், கவிதை வாசித்தல், மாறுவேடப்போட்டி, வில்லுப்பாட்டு, நடனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் சுதா பரிசுகள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்கள், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் உள்ளிட்ட கிராம பொதுமக்கள், மாணவா்களின் பெற்றோா் கலந்து கொண்டனா். ஆசிரியா் மகேஸ்வரன் நன்றி கூறினாா்.

 

Leave a Reply

Your email address will not be published.Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)