மணல் கடத்தல்: பொக்லைன் இயந்திரம், லாரி பறிமுதல்

செய்யாறு அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், லாரி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு தலைமையிலான போலீஸாா் அரசங்குப்பம் கிராமம் அருகே ஞாயிற்றுக்கிழமை தீவிர மணல் கடத்தல் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்குள்ள பாலாற்றுப் படுகையில் பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியில் மணல் ஏற்றிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

மணலை அள்ளிக் கொண்டிருந்தவா்கள் வந்திருப்பது போலீஸாா் என அறிந்ததும், வாகனங்களை அப்பகுதியிலேயே நிறுத்தி விட்டு தப்பியோடினா்.

உடனே போலீஸாா் பொக்லைன் இயந்திரம், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய அரசங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் திவாகா், திருப்பனங்காடு கிராமத்தைச் சோ்ந்த பொக்லைன் ஓட்டுநா் செல்வம் ஆகியோரை தேடி வருகின்றனா்.

Leave a Reply

Your email address will not be published.Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)