நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

நீடாமங்கலம்:  புத்திரபாக்கியம் அருளும் நீடாமங்கலம் சந்தானராமசுவாமி  கோயிலில் மகாகும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் பிரதாபசிம்மரால் 1761-ல் நீடாமங்கலத்தில் கட்டப்பட்டது. சந்தானராமசுவாமி கோயில் மன்னர் தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் அருளியதால் இக்கோயில் கட்டப்பட்டதாக வரலாறு. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சதரால் பாடல் பெற்றது.

கோ பூஜையில் இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நீ.கோபாலசுவாமி.

புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் சந்தானகோபால ஜெபம் செய்து சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமரை வழிபட்டால் அப்பேற்றினை அடையலாம் என்பது ஐதீகம். சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த

சிறப்பு அலங்காரத்தில் சீதா,லெட்சுமணர் சமேத சந்தானராமர்.

4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆச்சார்யார்கள், எஜமானர்கள் அழைப்பு தொடங்கி சாற்றுமுறை கோஷ்டியும், மறுநாள் 5 ஆம் தேதி முதல் கால, இரண்டாம் கால  யாக பூஜைகளும், 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 3 வது கால மற்றும் 4 வது கால யாக பூஜைகளும் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள்.

இன்று 7 ஆம் தேதி புதன்கிழமை காலை விஸ்வரூபம், கும்பமண்டலபிம்ப பூஜைகள், நித்யஹோமங்கள். மகாபூர்ணாஹூதி , 5 வது கால பூஜைகள், அதனைத்தொடர்ந்து  காலை 10.30 மணிக்கு யாகசாலையிலிருந்து கடம்புறப்பாடு, காலை 11.15 மணிக்கு பெருமாள் விமானம், ராஜகோபுர விமானம் மற்றும் இதர விமானங்கள் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நீ.கோபாலசுவாமி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் அரச்சகர் நாராயணன் மற்றும் வேதவிற்பன்னர்கள் வேதமந்திரங்களைச் சொல்லி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

இதையும் படிக்க: கருங்குயில்நாதன்பேட்டை சக்திபுரீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு

இரவு சந்தானராமர் திருவீதி புறப்பாடும், நாதஸ்வர இன்னிசைக் கச்சேரியும்  நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ஏ.ரமேஷ், ஆய்வாளர் சி.ஜெயபால்,செயல் அலுவலர் இ.மணிகண்டன்  மற்றும் நீடாமங்கலம் நகரவாசிகள், சந்தானராமர் சேவாடிரஸ்ட் அமைப்பினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நீடாமங்கலம் காவல் துறையினர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)