போளூர் செய்யாற்று பகுதியில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல்

திருவண்ணாமலை 26 நவம்பர் 2011.

திருவண்ணாமலை: போளூர் செய்யாற்று பகுதியில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றுவதாக தாசில்தார் மூர்த்திக்கு நேற்று முன்தினம் மாலை தகவல் கிடைத்தது, அதன் பேரில் ஆர்.குன்னத்தூர் ரயில்வே கேட் அருகே வருவாய் துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அபோது அவ்வழியே எட்டு மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது. அவற்றை மடக்கி பிடித்து போளூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போளூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.போளூர் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி சென்ற எட்டு மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Did you like this? Share it:

Leave a Reply

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)