பால் விலை மற்றும் மின் கட்டணம் உயர்வை கண்டித்து: திருவண்ணமலையில் ம.தி.மு.க ஆர்பாட்டம்
திருவண்ணாமலை நவம்பர் 29, 2011.
பால் விலை, பேருந்து மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து திருவண்ணாமலையில் ம தி மு க வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை கோட்டாச்சியர்அலுவலகம் முன்பு மாவட்ட ம தி மு க சார்பில் பால் விலை, பேருந்து மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆரணி டி.ராஜா தலைமை தாங்கினர்.
ஏற்றாதே ஏற்றாதே பேருந்து கட்டணத்தை ஏற்றாதே!
உயர்த்தாதே உயர்த்தாதே பால் விலையை உயர்த்தாதே!
மின் கட்டணத்தை உயர்த்தாதே உயர்த்தாதே!
ஏழை நடுத்தர குடம்ப மக்களை வாட்டாதே வாட்டாதே!
என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை ஆரசின் கவனத்திற்க்கு எடித்து செல்லும் வகையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு மதிமுகவினர் வலியுறித்தினார். இந்த ஆர்பாட்டத்தில் மாணவரணி மாநில துணை செயலாளர் பாசறை பாபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனி. கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் அண்ணாமலை, பிரபுராம், பொதுக்குழு உறுப்பினர் தேவராஜ் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், நிர்வாகிகள் கலந்து கொண்டனர் முடிவில் திருவண்ணாமலை நகர செயலாளர் பச்சியப்பன் நன்றி குறினார்.
திருவண்ணமலையில் ம.தி.மு.க வினர் பால் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்ற போது எடுத்த படம்.
நிருபர், படம்: செந்தில்
